Thursday, July 13, 2017

சலுகைகள் பெற 'ஆதார்' கட்டாயமா? 

5 நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும்


புதுடில்லி: 'தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை உட்பட, ஆதார் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்த வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, 18 - 19ம் தேதிகளில் விசாரிக்கும்' என, சுப்ரீம் கோர்ட், நேற்று அறிவித்துள்ளது.



நாடு முழுவதும், அரசின் பல்வேறு இலவசத் திட்டங்களையும், மானியங்களையும் பெற, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இந்த வழக்கின் விசாரணையை விரைவில் துவங்க வேண்டும்' என, வாதிட்டனர்.
'இந்த வழக்கை, ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டுமா' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது.

ரகசியம்

ஆனால், 'ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும்' என,

அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறினார். இதையடுத்து, 'ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு, தனிநபர் ரகசியம் காக்கும் உரிமை உட்பட, ஆதார் தொடர் பான பல்வேறு விவகாரங் கள் குறித்த வழக்குகளை, 18 - 19ம் தேதிகளில் விசாரிக்கும்' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவித்தனர்.
முன்னதாக, கடந்த, 7ம் தேதி, ஆதார் வழக்குகளை விசாரித்த, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 'ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், சுப்ரீம் கோர்ட்டின் பெரிய அமர்வு விசாரிக்கும்; இந்த விஷயத்தில், தலைமை நீதிபதி இறுதி முடிவு எடுத்து, அரசியல் சாசன அமர்வை அமைப்பார்' என, தெரிவித்தது.

பரிந்துரை

அப்போது, மூன்று நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றிருந்த, நீதிபதி சலமேஸ்வர், 'அரசியல் சாசன அமர்விற்கு, ஒரு வழக்கு பரிந்துரை செய்யப்பட் டால், அதன் பின், அந்த வழக்கு தொடர்பான அனைத்து விவகாரங்களையும், அந்த அமர்வுதான் விசாரிக்கும். 'எனக்கு தெரிந்த வரை, ஒன்பது நீதிபதி கள் அடங்கிய பெரிய அமர்வு தான், இந்த விவகா ரத்தை கையாள வேண்டும்' என, கருத்து தெரிவித்தார்.

இருப்பினும், 'ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வா அல்லது ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வா என்பது குறித்து, தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும்' என, மூன்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு முன், ஜூன், 27ல், ஆதார் தொடர்பான வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட்டின் இரு

நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அரசு சலுகை களை பெற, ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவு எதிராக, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது.

அரசு உறுதி

அப்போது,ஆதார் அட்டை இல்லாத காரணத்தை காட்டி, யாருக்கும், அரசு சலுகை கள் கிடைக்காமல் போகாது என, அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.'மத்திய அரசின் நலத்திட்டங்களில் அளிக்கப்படும் மானியங்கள் மற்றும் சலுகைகளை பெற, ஆதாரை கட்டாய மாக்கக் கூடாது' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் பல்வேறு உத்தரவுளை ஏற்கனவே பிறப்பித்துள்ளது.

இருப்பினும், சமையல், 'காஸ்' மானியம், ஜன் தன் திட்டம், பொது வினியோக முறை ஆகிய வற்றின் பலன்களை பெற, பொதுமக்களி டம் இருந்து, அவர்களின் விருப்பத்துடன், ஆதார் அட்டைகளை பெறுவதற்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024