Thursday, July 13, 2017

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் 13 ஜூலை
2017
00:17


மதுரை: மதுரை அய்யர்பங்களா மாணவர் சிபியின் சார்பில் அவரது தந்தை வழக்கறிஞர் கே.கே.கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு

எனது மகன் சிபி. இவர் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வில் 500 க்கு 473 மதிப்பெண் பெற்றார். மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வில் 476 மதிப்பெண் பெற்றார். மருத்துவ படிப்பிற்கு உறுதியாக இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 85 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டில் சி.பி.எஸ்.இ., மற்றும் இதர பாடத்திட்ட மாணவர்களுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜூன் 22 ல் அரசாணை பிறப்பித்தார்.

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் ஒரே மாதிரியாக மாணவர் சேர்க்கையை பின்பற்றும் வகையில், 'நீட்' கொண்டு வரப்பட்டது.
தமிழக அரசின் அரசாணையானது, பல்வேறு பாடத்திட்ட மாணவர்களை பாகுபடுத்தும் வகையில் உள்ளது.

'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லுாரியில் இட ஒதுக்கீடு கிடைப்பதில் சிரமமாக உள்ளது. இது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது.

தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடிவுக்கு வரும்வரை மருத்துவக் கல்லுாரியில் ஒரு எம்.பி.பி.எஸ்., இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார். இதுபோல் மேலும் ஒருவர் மனு செய்தார்.
நீதிபதி கே.கல்யாண சுந்தரம்

உத்தரவு: இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலக தேர்வுக்குழு செயலருக்கு உத்தரவிடப்
படுகிறது. விசாரணை ஜூலை 14க்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024