Monday, July 17, 2017

பெண் கேட்டு பேனர் வைத்த 9 வாலிபர்கள் கைது

பதிவு செய்த நாள் 17 ஜூலை
2017

02:10 அரூர்: அரூர் அருகே, கோவில் திருவிழாவில், 'வயசு பசங்க நாங்க; பொண்ணு இருந்தா தாங்க' என, பேனர் வைத்த, ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீரைப்பட்டியில், ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், 11ம் தேதி பேனர் வைத்தனர். இது குறித்து, கீரைப்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், அரூர் போலீசில் புகார் அளித்தார்.

அதில், 'அனுமதி பெறாமல் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார். இதையடுத்து, பேனர் வைத்த, ஒன்பது வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024