Sunday, July 16, 2017

போதையில் மயங்கிய மாணவர்கள்; ஆசிரியர்களே மீட்ட அவலம்!!!


பள்ளி மாணவர்கள் இருவர் பள்ளி நேரத்தில் மது குடித்து  விட்டு போதையில் ரோட்டில் மயங்கி கிடந்தனர். அவர்களை ஆசிரியர்களே மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்த வேதனை சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சி மாவட்டம் அருகே உள்ள மணப்பாறையில் உள்ள பாரதியார் நகர் பகுதியில் அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயன்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் இரண்டு பேர் நேற்று பள்ளி நடந்து கொண்டிருக்கும் போதே பள்ளியில் இருந்து வெளியேறி அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தாக கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு மது போதை அதிகமாகவே அவர்கள் இருவரும் தள்ளாடியுள்ளனர். மது போதையுடனேயே மீண்டும் பள்ளிக்கு செல்ல முயன்ற இவர்கள் போதை தாங்க முடியாமல் பாரதியார் நகர் பஸ் ஸ்டாப் அருகிலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளனர்.

பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் இருவர் போதை மயக்கத்தில் பஸ் ஸ்டாப் அருகே விழந்து கிடப்பதை பார்த்த அப்பகுதிமக்கள் பள்ளிக்கு தகவலளித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை மீட்டு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மதுவிற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்களும் பிரச்சாரங்களும்நடந்து வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி, போதை மயக்கத்தில் ரோட்டிலேயே மயங்கி விழுந்ததை கண்ட பொதுமக்கள் வேதனையடைந்தனர்

No comments:

Post a Comment

HC: No addl certificate needed for MD anaesthesiology docs

HC: No addl certificate needed for MD anaesthesiology docs TIMES NEWS NETWORK 21.01.2026 Bengaluru : The high court has held that a medical ...