சபாஷ்... வலைதளத்தில் விரிந்த மனிதநேயம்! கீழே கிடந்த, 14 ஆயிரம் ரூபாய் உரியவரிடம் சேர்ப்பு
பதிவு செய்த நாள் 12 ஜூலை
2017
00:54
திருப்பூர் · திருப்பூரில், கீழே கிடந்த, 14 ஆயிரம் ரூபாய் பணம், சமூக வலைதள தகவலால், உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது; பணத்தை ஒப்படைத்த நபர்களை, பொதுமக்கள் பாராட்டினர்.
திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழியை சேர்ந்தவர் சுப்ரமணியம், 51; விவசாயி. இவர், கடந்த, 4ல், திருப்பூர் கே.செட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே, வியாபாரியிடம் கொய்யாப்பழம் வாங்கினார். அப்போது, அவரது பாக்கெட்டில் இருந்த பணம், தவறுதலாக கீழே விழுந்தது. இதை கவனிக்காமல், பைக்கை எடுத்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
அங்கு பழம் வாங்க வந்த வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த இளங்கோவன், 41, கீழேயிருந்த, 14 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்தார்; புறப்பட ஆயத்தமாக இருந்த சுப்ரமணியத்திடம் கொடுக்க, சத்தம் போட்டு அழைத்தார்; அதற்குள், அவர் புறப்பட்டு சென்றார். இதையடுத்து, யாராவது பணம் கேட்டு வந்தால், தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறிவிட்டு, இளங்கோவன் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து, நண்பர் சுந்தரபாண்டியனிடம், இளங்கோவன் கூறினார். அவர், இத்தகவலை, "வாட்ஸ்அப்', "பேஸ்புக்'கில் பதி
விட்டார்.
இது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வளைகுடா நாட்டில், மஸ்கட்டில் வசிக்கும் பூர்ணிமா , அதே தகவலை, அவர் படித்த பள்ளியின் தோழியர் குழுவில் பகிர்ந்தார். அதில், சுப்ரமணியத்தின் மனைவி கீதா, இத்தகவலை பார்த்துள்ளார். அதிலுள்ள, இளங்கோவனை மொபைல் எண்ணுக்கு, தொடர்பு கொண்டு, நடந்ததை கூறியுள்ளார்.பணத்தின் உரிமையாளர், அவர் தான் என்பதை, இளங்கோவனும், சுந்தரபாண்டியனும் உறுதி செய்தனர். இதனால், கொய்யா வியாபாரியிடம் கொடுத்து வைத்திருந்த, 14 ஆயிரம் ரூபாயை பெற்று, பணத்தை தொலைத்த அதே இடத்தில் வைத்து, சுப்ரமணியத்திடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.
கிடைத்த காசை, சத்தம் போடாமல் எடுத்து செல்லும் இக்காலத்தில், 14 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த, இருவரின் செயலை, பலரும் பாராட்டினர்.விவசாயி சுப்ரமணியம் கூறுகையில், "கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணம், எங்கும் போகாது என்பது, இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பணம் இருப்பது குறித்து, எனது மனைவி யின் வாட்ஸ் அப் குழுவில் தகவல் வந்திருந்தது. அதை பார்த்து, தொடர்பு கொண்டு, உரிய அடையாளத்தை கூறி, பணத்தை பெற்றிருக்கிறோம்.அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படும் இந்த காலத்தில், இப்படியும் சிலர் இருப்பது, பாராட்டுக்குரியது; சமூக வலைதளங்களின் வாயிலாக, இத்தகைய பயனுள்ள தகவல்கள் பரிமாறப்படுவது, மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
உரியவரிடம் பணம் சென்றடைய, சமூக வலைதளங்கள் உதவிகரமாக இருந்ததாக, இளங்கோவன், சுந்தரபாண்டியன் கூறினர்.

No comments:
Post a Comment