Wednesday, July 12, 2017

துணைவேந்தர் நியமனம் : 3 பல்கலை சட்டத்தில் திருத்தம்

பதிவு செய்த நாள் 11 ஜூலை
2017
22:51

சென்னை: துணைவேந்தர் நியமனம் தொடர்பாக, மூன்று பல்கலை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர, புதிய சட்ட மசோதா, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும், 13 பல்கலைகளில், காலதாமதமின்றி துணைவேந்தரை நியமிக்க, சட்டசபையில் சட்ட மசோதா, கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மீன்வளப் பல்கலை, அம்பேத்கர் சட்டப் பல்கலை, தமிழ் பல்கலை ஆகியவற்றிலும், காலதாமதமின்றி துணைவேந்தரை நியமிக்க, நேற்று சட்டசபையில், புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இப்புதிய சட்டத்தில், துணைவேந்தர் நியமனத்திற்கு, மூன்று அல்லது ஐந்து நபர் கொண்ட, தேடுதல் குழு அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய சட்டப்படி, துணை வேந்தர் பணியிடம் காலியாகும் தேதிக்கு, ஆறு மாதங்களுக்கு முன், தேர்வு குழு அமைக்கும் பணி துவங்க வேண்டும். இரு மாதங்களுக்கு உள்ளாக, செனட் உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். துணைவேந்தர் பணியிடம் காலியாகும் தேதிக்கு, நான்கு மாதங்களுக்கு முன், தேடுதல் குழு, உரிய நபர்கள் அடங்கிய பட்டியல், தயாரிப்பு பணியை துவக்க வேண்டும். நான்கு மாதங்களுக்குள், தேர்வு செய்த நபர்கள்
பட்டியலை, கவர்னரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பல்வேறு சூழ்நிலை காரணமாக, நான்கு மாதங்களுக்குள்ளாக, தேர்வு குழுவினர் மூன்று பேர் பட்டியலை கொடுக்காவிட்டால், கவர்னர் கூடுதல் நேரம் ஒதுக்கலாம் அல்லது குழுவை கலைத்துவிட்டு, மீண்டும் ஒரு குழுவை நியமிக்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024