சொத்து குவிப்பு: நேருவுக்கு சிக்கல்
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி:சொத்துக் குவிப்பு வழக்கில், தி.மு.க.,வின், முன்னாள் தமிழக அமைச்சர், நேரு மற்றும் அவர் மனைவியை விடுவித்து, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில், 2006 - 2011ல், தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர், நேரு; தற்போது, திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
அதிகரிப்பு
இவர், அமைச்சராக பதவி வகித்தபோது, தன் பெயரிலும், மனைவி சாந்தா, மகன் அருண் பெயரிலும் வருவாய்க்கு அதிகமாக சொத்துக் களை வாங்கி குவித்ததாக, 2011ல் வழக்கு தொடரப்பட்டது.கடந்த, 2006ல், இவர்கள் பெய ரில், 2.83 கோடி ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு, 2011ல், 18.52 கோடி ரூபாயாக அதிகரித் ததாக, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்ட பின், தங்களை விடுவிக்கும்படி, கீழ் கோர்ட்டில், நேரு உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்தனர். ஆனால், வழக்கிலிருந்து, நேரு, சாந்தாவை விடுவிக்காத கீழ் கோர்ட், அருணின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில், மூவரும் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனுக்களை விசாரித்த ஐகோர்ட், நேருவையும், அவர் மனைவியையும், வழக்கில் இருந்து விடுவித் தது; இருப்பினும், மகன் அருணின் சொத்து, வரு வாய் குறித்து மேல் விசாரணை நடத்த வேண்டும் என, ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேல் முறையீடு
நேருவையும், அவர் மனைவி சாந்தாவையும், வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து,சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில், நேரு சார்பில் ஆஜரான வழக்கறி ஞர், நேருவுக்கு, அவர் மகன் அருண் மூலமாக வரு வாய் கிடைத்ததாகவும், அருண் தனக்கு கிடைக்கும் வருவாய்க்கு, டி.டி.எஸ்., எனப்படும் முறையில், வருவாய் கிடைக்கும்போதே வரி செலுத்தி விட்ட தாகவும், அதனால், வருவாய்க்கு மீறிய சொத்து சேர்த்ததாக கூற முடியாது என்றும் வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்க றிஞர், முகுல் ரோஹத்கி, 'ஆரம்ப நிலையி லேயே, நேருவும், அவர் மனைவியும், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 'அவர்கள் மீதான குற்றச் சாட்டுகள் தீர விசாரிக்கப்பட வேண்டி உள்ளது. அருண் மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டையும்விசாரிக்க வேண்டும்' என்றார். வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவா ராய் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த வழக் கில், நேரு, அவர் மனைவி சாந்தா ஆகியோரை விடுவித்து, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அருண் மீதான குற்றச்சாட்டு களை விசாரிக்க வேண்டும் என்ற, கீழ் கோர்ட்டின் உத்தரவு உறுதி செய்யப் படுகிறது.
விசாரணை
நேரு, அவர் மனைவி, மகன் மீதான குற்றச் சாட்டுகள் குறித்த விசாரணையை, புலனாய்வு துறை விரைவில் முடிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, இவர்கள் மீதான வழக்கு விசார ணையை, கீழ் கோர்ட் தொடர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.
No comments:
Post a Comment