Wednesday, July 12, 2017

ரூ.399-க்கு 84 ஜிபி டேட்டா: ஜியோவின் தன் தனாதன் ஆஃபர்..!



ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட ‘தன் தனாதன் ஆஃபர்’ மேலும் அதிக சலுகைகளோடு வேலிடிட்டியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ‘தன் தனாதன் ஆபர்’ என்ற சலுகையை வழங்கிவந்தது. அந்த ஆபர் இப்போது மேலும் சலுகைகளோடு வேலிடிட்டியும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ரூ.349, ரூ.399, ரூ.509 ஆகிய பிளான்களுக்கு அதிகமான 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்தால் 20 ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். இந்த பிளானுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதற்கு தினசரி பயன்பாட்டு அளவு கிடையாது.

20 ஜிபி காலியானாலும் 128 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவைப் பயன்படுத்த முடியும். ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த பிளானில் மொத்தமாக 84 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். இதில் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் அனைத்தும் இலவசம். ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால் 56 நாள் வேலிடிட்டியுடன் 112 ஜிபி பயன்படுத்தலாம். இதைவிட அதிக தொகைகளில் உள்ள பிளான்களில் எந்த மாற்றமும் இல்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024