Wednesday, July 12, 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சலுகை தொகை ரத்து: மத்திய அரசு அதிரடி!!

புதுடெல்லி: குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைப்படியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய நிதி ஆணையத்தின் 7வது ஊதிய அறிக்கையை ஆய்வு செய்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை திருத்தி அமைப்பதற்காக நிதித்துறை செயலாளர் அசோக் லவசா தலைமையில் சலுகைகள் கமிட்டியை (சிஓஏ) அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. 

மேற்படி  கமிட்டியினர், 196 சலுகைகள் மீது நடவடிக்கைஎடுக்கலாம் என மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27ல் அறிக்கை சமர்ப்பித்தனர்.அதில், மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த ‘அளவான, குடும்பம், திட்டமிட்ட குடும்பம்’ எனும் மத்திய அரசின் கொள்கை நிறைவேறி இருப்பதால், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகையை ரத்து செய்து விடலாம் எனவும் சிஓஏ பரிந்துரை செய்திருந்தது. சிஓஏ பரிந்துரைகள் மீது விவாதங்கள் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஜூன் மாதம் 28ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.

6ம் தேதி அன்று அரசு முறைப்படியான அறிவிக்கை வெளியானது. அறிவிக்கைப்படி, குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஊழியர்களுக்கு,பணி அந்தஸ்துக்கு ஏற்றபடி வழங்கப்பட்டு வந்த ரூ.210 முதல் ரூ.1,000 வரையிலான சலுகை ரத்து செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024