கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு: மருத்துவ உதவியாளர் தலைமறைவு
By DIN |
Published on : 09th July 2017 03:39 AM |
தனியார்
மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர் கருக்கலைப்பு செய்ததால் பெண் ஒருவர்
உயிரிழந்தார். இது தொடர்பான புகாரை அடுத்து மருத்துவ உதவியாளர் மீது
வழக்குப் பதிவு செய்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அந்த மருத்துவ உதவியாளர் தலைமறைவாகிவிட்டார்.
விழுப்புரம்
மாவட்டம் திருக்கோவிலூரில் டி.வி. என்ற தனியார் மருத்துவமனை இயங்கி
வருகிறது. இந்த மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்பாக நவசக்தி(34) என்ற
ஐந்து மாத கர்ப்பிணி கருக்கலைப்பு செய்வதற்காக வந்தார். இவருக்கு ஏற்கெனவே 4
குழந்தைகள் உள்ளன.
மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவ உதவியாளர் வனிதா என்பவர் அந்தக் கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார்.
மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவ உதவியாளர் வனிதா என்பவர் அந்தக் கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார்.
கருக்கலைப்புக்குப் பின்பு வீட்டுக்குச் சென்ற அந்தப் பெண்ணுக்கு சில தினங்களுக்கு பின்பு வலிப்பு வந்துள்ளது. இதனையடுத்து அவர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு ரத்தத்தில் நச்சேற்றம் இருப்பதும் (செப்ஸிஸ்), மூளைக்கு ரத்த ஓட்டம் தடைபட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. அவர் சுயநினைவை இழந்ததையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பயனளிக்காமல் அவர் ஜூலை 1}ஆம் தேதி உயிரிழந்துள்ளார். முறையாக கருக்கலைப்பு செய்யாததால் கர்ப்பப் பையில் தொற்று ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான தகவலின் பேரில், ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் பி.பானு, விசாரணைக் குழுவை நியமித்தார். இந்தக் குழுவினர் சோதனை மேற்கொண்டதில் அந்த மருத்துவமனையில் ஸ்கேன் கருவி, பிற உபகரணங்கள், கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த மருத்துவமனையில் 2016}ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பின்னர் மருத்துவர்கள் வருவதில்லை என்பதும், அதற்கு பின்னர் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களே பல கருக்கலைப்புகளை செய்துள்ளதுனர் என்பதும் கண்டறியப்பட்டது.
உயிரிழந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த வனிதா என்ற மருத்துவ உதவியாளர், மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் பிற ஊழியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment