சென்னையின் இரவை ஸ்பெஷலாக்கிய மழை!
vikatan
நேற்று மாலை வரை சென்னையில் இப்படி விடிய, விடிய மழை பெய்யும் என்று
சென்னை வாசிகள் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். வழக்கம் போல,
வெயிலின் ஆதிக்கமே மாலை வரை இருந்தது. ஆனால், இரவு நேரத்தில் நிலைமை
மாறத்தொடங்கியது. இரவு 9, 10 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.
இதையடுத்து, மழைத்தூரல்கள் விழத்தொடங்கின.
பின்னர் சற்று பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. மழை தொடர்ந்து பெய்த வண்ணமேதான் உள்ளது. குறிப்பாக, வட சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே நேற்று காலை, "சென்னை வாசிகள் இன்று குடையுடன் வெளியில் செல்லுங்கள். இது மிகவும் ஸ்பெஷலான நாள். விடிய, விடிய மழை பெய்யும்" என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து இருந்தார்.
அவர் சொன்னது போலவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சோழவரம் பகுதியில் 150 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மிஞ்சூரில் 68 மி.மீ மழையும், கடம்பத்தூர் (திருவள்ளூர்) பகுதியில் 82 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இரவு முழுவதும் மழைக்கு கியாரன்டி என்று வெதர்மேன் மீண்டும் கூறியிருப்பது கூடுதலான குளிர்ச்சித் தகவல்.

Dailyhunt
No comments:
Post a Comment