Monday, October 2, 2017

அறை கிடைக்காமல் பயணிகள் திணறல்:போக்குவரத்து நெரிசலில் தவிப்பு
பதிவு செய்த நாள்02அக்
2017
01:40

கொடைக்கானல்;கொடைக்கானலில் தொடர் விடுமுறையில் குவிந்த சுற்றுலாபயணிகள ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறை கிடைக்காமல் திணறினர். சிலர் குழந்தைகளுடன் பஸ்ஸ்டாண்ட்டில் தங்கினர்.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது.தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். இதனால் ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் திணறினர்.ரூ.800 க்கு பெறுமான அறைகள் ரூ.2,500 லிருந்து ரூ.3,000 வரை வாடகை நிர்ணயிக்கப்பட்டது. ரிசார்ட்ஸ்கள் அனைத்தும் ஆன் -லைனில் புக்காயின. சுற்றுலாபயணிகள் வருகையால் தனியார் காட்டேஜ்களுக்கு கொண்டாட்டமாகியது. 

5 பேர் தங்கக்கூடிய காட்டேஜ்கள் ரூ. 12.000 லிருந்து ரூ.20.000 வரை பேரம் பேசப்பட்டன. வேறு வழியின்றி சுற்றுலாபயணிகளும் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பல சுற்றுலாபயணிகள் பஸ்ஸ்டாண்ட் மற்றும் அடைக்கப்பட்ட கடைகளில் வெளியே துாங்கும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. உணவகங்களில் பொருட்களின் விலையை கூட்டி ஓட்டல் உரிமையாளர்கள் கல்லா கட்டினர்.

கொடைக்கானலுக்கு அதிகளவு வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோட்டின் இருபக்கமும் மணல் மற்றும் செங்கல் ஏற்றி செல்லும் பிக்அப், லாரி வாகனங்களின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசாரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டினர். 

நகரில் ஒரு வழிப்பாதை இல்லாததால், பயணிகள் வாகனங்களிலேயே பல மணிநேரம் திணற வேண்டி இருந்தது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024