Wednesday, October 4, 2017

மலேஷியாவில் தவிக்கும் காஞ்சிபுரம் பெண்:மீட்டுத்தர பிள்ளைகள் கோரிக்கை

பதிவு செய்த நாள்03அக்
2017
23:49

காஞ்சிபுரம்;திருக்காலிமேட்டிலிருந்து மலேஷியாவிற்கு, வீட்டு வேலைக்கு சென்ற பெண், அங்கு சிக்கி தவிப்பதாகவும், அவரை மீட்க வேண்டும் எனவும் அவரது பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் அடுத்த திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி, அல்லி, 38. இவர்களுக்கு, விக்னேஷ், 22; கீர்த்தனா, 19 மற்றும் 17 வயதில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.காஞ்சிபுரத்தில் வீட்டு வேலை செய்து வந்த அல்லி, தனியார் நிறுவனம் மூலம், ஜூலை மாதம், மலேஷியா நாட்டிற்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.மலேஷியாவில், தமிழர் வீட்டில் பணி புரிவதால், திருக்காலிமேட்டில் இருக்கும் உறவினர்கள் நிம்மதியுடன் இருந்தனர்.
ஆனால், கடந்த இரு வாரமாக, அல்லி தன் குழந்தைகளுடன் மொபைல் போனில் பேசவில்லை. இதுகுறித்து அவர்கள் விசாரித்த போது, மலேஷியாவில் தங்கள் தாய் மோசமாக நடத்தப்படுவதும், அவரின் மொபைல் போனை அங்குள்ளவர்கள் பறித்து வைத்திருப்பதும் தெரிய வந்தது.தன்னை மீட்க வேண்டும் என, அல்லி, தன் பிள்ளைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.எனவே, மலேஷியாவில் சிக்கி தவிக்கும் தங்கள் தாயை, தமிழக, மத்திய அரசுகள் மீட்க வேண்டும் என, அல்லியின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024