Wednesday, October 4, 2017

செங்கோட்டை - -புனலூர் அகல ரயில்பாதை : 2018 ஜனவரியில் ரயில்கள் இயக்க வாய்ப்பு
பதிவு செய்த நாள்03அக்
2017
23:47




திருநெல்வேலி: செங்கோட்டை - புனலுார் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் வரும் டிசம்பருக்குள் நிறைவடையும் நிலையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம், புனலுார் வரையிலான 49.5 கி.மீ. தொலைவுக்கு மீட்டர்கேஜ் ரயில் பாதையை, அகலப் பாதையாக்கும் பணிகள், 358 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2010 செப்.20ல்
துவங்கின. மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டாலும், கடினமான பணிகள், நிதி ஒதுக்கீடு குறைவு காரணமாக 7 ஆண்டுகளாகி விட்டன.கேரள எல்லைக்குள் 37.38 கி.மீ., தமிழக எல்லைக்குள் 12.12 கி.மீ., துாரம் இந்த வழித்தடத்தில் உள்ளது. இதில், செங்கோட்டை - பகவதி
புரம் - ஆரியங்காவு - புதியஆரியங்காவு நிலையங்களுக்கு இடையே பணிகள் முடிந்துவிட்டன. 

கேரளாவில் புனலுாரில் துவங்கி செங்கோட்டையை நோக்கி வரும் தடத்தில் எடமண், ஒட்டக்கல்,தென்மலை ஆகிய ஸ்டேஷன்களின் பணிகள் முடிந்துவிட்டன.தென்மலை - கழுதுருட்டி - எடப்பாலம் ஆகிய நிலையங்களுக்கு இடையிலான சுமார் 14 கி.மீ.,பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில், புதிய குகைப்பாலங்கள்,ஏற்கனவே உள்ள பாரம்பரியமான தென்மலை பாலம் ஆகியவற்றிலும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து, 2018 ஜனவரியில் புனலுாரில் இருந்து நெல்லை வரையிலும் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

நினைவிடம் கோரிக்கை : இதற்கிடையே அக்.6ம் தேதி தென்மலையில் இருந்து ஆரியங்காவு வரை ரயில் பயணிகள் சங்கத்தினர்,உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கைகளை முன்வைத்து நடைபயணத்தை துவக்குகின்றனர். அக்.6ம் தேதி தென்மலையில் கொல்லம் எம்.பி.,பிரேமசந்திரன், பத்தினாபுரம் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் ஆகியோர் துவக்கி வைக்கும் ஊர்வலம்,அக்.13ம் தேதி ஆரியங்காவுவில் நிறைவடைகிறது.

110 ஆண்டுகளுக்கு முன்பு குகைப்பாலம் கட்டும்போது இறந்த தொழிலாளர்களுக்கு நினைவிடம் ஏற்படுத்த வேண்டும். 13 கண் பாலம் என்றழைக்கப்படும் தென்மலை உயர்பாலத்தின் பழைய புகைப்படங்களின் கண்காட்சியை அங்கு நிறுவவேண்டும். தென்மலையில் ரயில்வே மியூசியம் நிறுவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024