டாக்டர் அனுமதியில்லாமல் மருந்துகள் விற்க கூடாது : அமைச்சர் விஜயபாஸ்கர்
பதிவு செய்த நாள்
06அக்2017
03:28
சென்னை: ''டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல், மருந்துகளை விற்க கூடாது,'' என, மருந்து வணிகர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.
ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், மருந்து வணிக சங்க நிர்வாகிகளுடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அமைச்சர்விஜயபாஸ்கர் பேசியதாவது: தமிழகத்தில், 37 ஆயிரத்து, 93 சில்லரை மருந்து விற்பனை நிலையங்களும்; 14 ஆயிரத்து, 894 மொத்த விற்பனை நிலையங்களும் உள்ளன. இவற்றில், டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல், மருந்துகளை விற்க கூடாது. மருந்து கடைகளில், டெங்கு விழிப்புணர்வு குறித்த பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டி வைக்கவேண்டும்.
சென்னையில், மூன்று நாட்களில், இரண்டு லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை அரசுக்கு சவாலான ஒன்றாக உள்ளது. ஆனாலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.

No comments:
Post a Comment