Friday, October 6, 2017

சேலம் உள்பட 4 மாவட்டங்களில் விடிய, விடிய மழை பாலம் உடைந்தது, பயிர்கள் சேதம் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

2017-10-06@ 00:25:32


சேலம்: சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. பயிர்களும் தண்ணீரில் மூழ்கின. தரைப்பாலம் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு துவங்கி விடிய, விடிய பலத்தமழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் 984 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மாநகரின் தாழ்வான பகுதிகளில் பெய்த மழையால், திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக மாறியது. பலத்த மழையால் குமரகிரி ஏரி நள்ளிரவில் நிரம்பியது. ஏரி நிரம்பி வெளியேறிய தண்ணீர் பச்சப்பட்டி, நாராயணநகர், ஆறுமுகநகர் பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். ஆட்டையாம்பட்டி பகுதியில் பெய்த பலத்த மழையால் திருமணி முத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது. இடைப்பாடியில் பலத்த மழையால் ₹ 30லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமானது.

ஓசூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மத்தம் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்தது. இதனால் அந்தப்பகுதியில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து தடைபட்டு, மக்கள் மிகுந்த சிரமத்தில் ஆழ்ந்தனர். அஞ்செட்டி மலைகிராமங்களில் பெய்த மழையால் தொட்டல்லா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024