Saturday, October 7, 2017

மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லூரிகளில் விரைவில் ஆய்வு

பதிவு செய்த நாள்06அக்
2017
21:50

மதுரை: மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்.,சீட் எண்ணிக்கையை, 250 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய உள்ளது.

மதுரை, நெல்லை அரசு மருத்துவ கல்லுாரிகளில் ஆண்டுதோறும் தலா, 150, எம்.பி.பி.எஸ்., சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. இவ்விரு கல்லுாரிகள் பழமையானதாக இருப்பதால், கல்லுாரியை மேம்படுத்தி, மாணவர் எண்ணிக்கையை, 250 ஆக உயர்த்த, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடுதல் சீட்கள் ஒதுக்கீட்டிற்கு அனுமதிகோரி, மத்திய சுகாதாரத்துறை, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு கல்லுாரிகள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு, கல்லுாரியில், 250 மாணவர்களுக்கான நவீன வகுப்பறை, நுாலகம், கூடுதல் விடுதி கட்டடம், பேராசிரியர்கள் இருப்பு விபரங்களை வழங்க, கவுன்சில் உத்தரவிட்டது.

அதன்படி, இரு கல்லுாரிகளும் விபரங்களை கவுன்சிலுக்கு வழங்கியிருந்தனர். இந்நிலையில், கல்லுாரிகளில் வசதிகள் விபரம் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அனுமதி கடிதத்துடன் ஆஜராக இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது.

இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை வழங்கிய அனுமதி கடிதம், கல்லுாரி கட்டமைப்பு வசதிகள் குறித்த விபரத்தை, மருத்துவ கல்வி இயக்குனரக துணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையில் கல்லுாரி கண்காணிப்பு அதிகாரிகள்,நேற்று மத்திய அரசின் அனுமதி கடிதத்தை பெற்று, இந்திய மருத்துவ கவுன்சிலில் ஒப்படைத்தனர். இதையடுத்து, 'விரைவில் கல்லுாரிகளில் ஆய்வு நடத்தப்படும்' என, கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024