Saturday, October 7, 2017

துணை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் இன்று நிறைவு

பதிவு செய்த நாள்06அக்
2017
23:00

சென்னை: துணை மருத்துவப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங், இன்று நிறைவடைகிறது.பி.எஸ்சி., நர்சிங்.,- பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடக்கிறது. இந்த படிப்புகளுக்கு, அரசு மருத்துவப் கல்லுாரிகளில் உள்ள, 538 இடங்களும் நிரம்பின.அரசு ஒதுக்கீடு, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 7,843 இடங்களில், 6,817 நிரம்பின; 1,026 இடங்கள் காலியாக உள்ளன. முதற்கட்ட கவுன்சிலிங், இன்று நிறைவடைகிறது. 'மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தேதி, விரைவில் அறிவிக்கப்படும்' என, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024