Sunday, October 8, 2017

வரித்துறை விசாரணைக்கு நேரில் போக வேண்டாம்

பதிவு செய்த நாள்07அக்
2017
20:10

சென்னை, வருமான வரி தாக்கல் தொடர்பான, சரி பார்ப்பு விசாரணைக்கு, நேரில் ஆஜராகாமல், இணைய தளம் வழியாக விளக்கம் தரும், 'இ - போர்ட்டல்' திட்டம், தமிழகத்தில், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்தி:வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்த படிவ விபரங்களில் சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு அதிகாரி முன், விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சென்னை, மதுரை, திருச்சி, கோவை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில், முதன்மை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும். இதில், வருமான வரி செலுத்துவோருக்கு பல சிரமங்கள் உள்ளன.அதனால், மின் ஆளுமை திட்டத்தின் கீழ், 'இ - போர்ட்டல்' எனும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி,www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில், வருமான வரி செலுத்துவோர் பதிவு செய்ய வேண்டும். வருமான வரி அதிகாரிகள், விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பினால், அதற்கான விளக்கத்தை, நேரில் செல்லாமல், வரித்துறையின் இணையதளம் வாயிலாக, 'இ - பைலிங் போர்டல்' வசதியை பயன்படுத்தி, அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

50 candidates in interview for VC posts

50 candidates in interview for VC posts  3 DAILY SLOTS  Many Serving, Ex-VCs’ Names Not On List  Poulami.Roy@timesofindia.com 19.10.2024 Kol...