Sunday, October 8, 2017

'ஹஜ்' பயணத்துக்கு மானியம் ரத்தாகிறது?
பதிவு செய்த நாள்07அக்
2017
23:13

புதுடில்லி, முஸ்லிம்களின் 'ஹஜ்' புனித யாத்திரைக்கு மானியம் வழங்கும் நடைமுறைக்கு 2018ல் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு கொள்கை வரைவு தயாரித்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டு தோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் பயணியருக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது.இந்த நடைமுறைக்கு 2018ல் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஹஜ் பயணியருக்கு மானியம் ரத்து உட்பட பல ஷரத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்துள்ள கொள்கை வரைவு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Govt probing how cost of secretariat doubled in 4 years

Govt probing how cost of secretariat doubled in 4 years Koride.Mahesh@timesofindia.com 19.10.2024 Hyderabad : With allegations of abnormal i...