ஆதார் எண் இணைத்தால் மாதம் 12 முறை ரயில் பயணத்துக்கு முன்பதிவு
By DIN | Published on : 06th October 2017 01:38 AM
ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைத்தால் மாதத்துக்கு 12 முறை ரயில் பயணத்துக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு வைத்திருந்தால்தான் இணையம் வழியாக ரயில் பயணத்துக்கான முன்பதிவை மேற்கொள்ள முடியும். அப்படி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்போது ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மாதம் 6 முறை மட்டுமே ரயில் பயணச் சீட்டை முன்பதிவு செய்ய முடியும். ஆதார் எண்ணை இணைக்கும் பயனாளிகள், இனி மாதம் 12 முறை இணையம் மூலமாக ரயில் பயணச் சீட்டை முன்பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment