கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு 'ஏர் இந்தியா' விமான சேவை
பதிவு செய்த நாள்
18அக்2017
00:24
சென்னை: 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம், நவ., 18 முதல், கோவையில் இருந்து, சிங்கப்பூர் மற்றும் டில்லிக்கு, நேரடி விமான சேவையை, துவக்குகிறது.
இது தொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தொழில் நகரான கோவையில் இருந்து, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், டில்லிக்கும், நேரடி விமான சேவைகள் குறைவாகவே உள்ளன. எனவே, கோவையில் இருந்து சிங்கப்பூர் மற்றும் டில்லிக்கு நேரடி விமான சேவைகள் அறிமுகம் செய்யப்படுகிறது.
* டில்லியில் இருந்து, செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில், இரவு, 7:00 மணிக்கு புறப்படும் விமானம், இரவு, 10:00 மணிக்கு கோவை சென்றடையும்

* கோவையில் இருந்து, புதன், வெள்ளி மற்றும் ஞாயிறன்று, மதியம், 2:05க்கு புறப்படும் விமானம், மாலை, 5:05 மணிக்கு, டில்லி சென்றடையும்
*, கோவையில் இருந்து, செவ்வாய், வியாழன் மற்றும் சனியன்று, இரவு, 11:15க்கு புறப்படும் விமானம், சிங்கப்பூருக்கு, அந்நாட்டு நேரப்படி, காலை, 6:15க்கு சென்றடையும்
* இதேபோல, சிங்கப்பூரில் இருந்து புதன், வெள்ளி மற்றும் ஞாயிறன்று, அந்நாட்டு நேரப்படி காலை, 10:40க்கு புறப்படும் விமானம், பகல், 12:30க்கு, கோவையை வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment