Friday, October 6, 2017

அரசு ஊழியருக்கு 20 சதவீத சம்பள உயர்வு?

பதிவு செய்த நாள்06அக்
2017
03:09

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு, தீபாவளிக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, 'மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப் பட்டதும், தமிழக அரசு
ஊழியர்களுக்கும் மாற்றி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி பிப்., 22ல் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க அலுவலர் குழு அமைத்து, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

குழு அறிக்கை அடிப்படையில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை அடுத்த வாரம் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

-நமது நிருபர்-

No comments:

Post a Comment

NewsToday 18.10.2024