Friday, October 20, 2017


பேஸ்புக்கில் புகைப்படங்கள் வெளியிடுவது இஸ்லாத்துக்கு விரோதம்'

பேஸ்புக்,புகைப்படங்கள்,வெளியிடுவது,இஸ்லாத்,விரோதம்
புதுடில்லி: 'சமூக வலைதளங்களில், முஸ்லிம்கள், தங்கள் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களை வெளியிடுவது, இஸ்லாத்துக்கு விரோதம்' எனக்கூறி, அதற்கு, 'பத்வா' எனப்படும் தடை விதித்து, 'தாருல் உலுாம் தியோபந்த்' என்ற முஸ்லிம் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. 

டில்லியில் உள்ள, பதேபூர் மசூதியின் இமாம், முப்தி முகரம் கூறியதாவது: தேவையின்றி புகைப்படங்கள் எடுப்பது, இஸ்லாத்துக்கு விரோதமானது; ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்ற முக்கியமான ஆவணங்களுக்காக, புகைப்படங்கள் எடுப்பதில் தவறில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் வெளியிடுவது போன்ற தேவையற்ற விஷயங்களுக்காக, புகைப்படம் எடுப்பது தவறு. முஸ்லிம் பெண்கள், புருவத்தை, வெட்டுவதும், அழகு படுத்துவதும், இஸ்லாத்துக்கு விரோதமானது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY