Friday, October 20, 2017

நாகை விபத்து: முதல்வரிடம் அமைச்சர் விளக்கம்


நாகை: நாகை மாவட்டம் பொறையாரில் அரசு போக்குவரத்து பணிமனையின் ஓய்வறையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் விளக்கம் அளித்துள்ளார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது, பலியான 8 பேரில் 7 பேர் டிரைவர்கள், ஒருவர் நடத்துனர். பலியானவர்களுக்கு நிவாரண நிதியை முதல்வர் விரைவில் அறிவிப்பார். போக்குவரத்து துறைக்காக புதிய கட்டடங்கள் விரைவில் கட்டப்படும் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024