மயில் அடிபட்டு இன்ஜின் பழுது ரயில் தாமதம்
2017-10-08@ 01:45:20
கோவில்பட்டி: மயில் அடிபட்டதால் இன்ஜின் பழுதாகி நெல்லை எக்ஸ்பிரஸ் கோவில்பட்டியில் இருந்து நெல்லைக்கு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. சென்னையில் இருந்து நேற்று காலை கோவில்பட்டி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ், புறப்பட்ட போது திடீரென ரயில் இன்ஜின் மின்தூக்கியில் மயில் ஒன்று அடிபட்டு இறந்தது. இதனால் இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் ரயிலை இயக்க முடியவில்லை. ரயில்வே பொறியாளர்கள் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இன்ஜின் சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு காலை 7.45 மணிக்கு அங்கிருந்து நெல்லைக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

No comments:
Post a Comment