Sunday, October 8, 2017

போளூரில் பரிதாப சம்பவம் ஷூக்குள் இருந்த தேள் கொட்டி மாணவி பலி: அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் அவலம்
2017-10-08@ 01:47:21




போளூர்: பள்ளிக்கு செல்ல ஷூ அணிந்தபோது அதில் பதுங்கியிருந்த தேள் கொட்டி 4ம் வகுப்பு மாணவி பலியானார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லாததால் இந்த சோகம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வீரப்பன் தெருவை சேர்ந்தவர் பார்த்தீபன், ராணுவ வீரர். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் வைஷ்ணவி(9). தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு புறப்பட்ட வைஷ்ணவி ஷூ அணிந்தபோது காலில் ஏதோ ஒன்று கடித்துள்ளது. வலியால் அலறி துடித்துள்ளார். தாய் ஓடிவந்து, ஷூவை கழற்றி பார்த்தபோது அதில் தேள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து மயங்கி விழுந்த வைஷ்ணவியை உடனடியாக போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் யாரும் பணியில் இல்லாததால் 2 கி.மீ தொலைவில் உள்ள அத்திமூர் சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கும் டாக்டர்கள் இல்லை. மேலும், விஷமுறிவு மருந்தும் இல்லையென மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து ஆபத்தான நிலையில் மாணவி வைஷ்ணவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதியம் 2 மணியளவில் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழிலேயே மாணவி இறந்துவிட்டார். இதையடுத்து சடலத்தை சொந்தஊரான மண்டகொளத்தூர் கொண்டு வந்து உடனடியாக அடக்கம் செய்தனர். அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் இல்லாததால் அலைக்கழிக்கப்பட்டதாலேயே மாணவி வைஷ்ணவி இறந்தார் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

50 candidates in interview for VC posts

50 candidates in interview for VC posts  3 DAILY SLOTS  Many Serving, Ex-VCs’ Names Not On List  Poulami.Roy@timesofindia.com 19.10.2024 Kol...