Sunday, October 22, 2017

வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி விளக்கம்


spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம்
புதுடில்லி: பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்குபவர்களும், டிச.,31க்குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக மீடியாக்களில் தகவல் வெளியானது.
உடனடியாக:

இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 
அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமில்லை என்பது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால், 2017 ஜூன் 1ல் அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், யார் யாருக்கெல்லாம் பொருந்துமோ அவர்களது வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாகும். இனியும், வங்கிகள் காத்திருக்காமல், ஆதார் இணைப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

NEWS TODAY