Sunday, October 22, 2017


'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி


 'ஆதார்,கட்டாயமில்லை', ஜார்க்கண்ட் அரசு, அதிரடி
ஜாம்ஷெட்பூர்:'ரேஷன் கடைகளில், உணவு தானியங்களை பெற, ஆதார் கட்டாயமில்லை' என, ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜார்க்கண்டில், முதல்வர், ரகுபர் தாஸ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, பட்டினியால் பலியானதாக தகவல் பரவியது. அரசு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறுமி, மலேரியாவால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.ஆனால், 'ஆதார் எண் இணைப்பில் தாமதம் ஏற்பட்டதால், ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்காததே, சிறுமியின் பட்டினி சாவுக்கு காரணம்' என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், 'ஜார்க்கண்ட் மாநிலத்தில், ரேஷன் கடைகளில், உணவு தானியங்களை பெற, குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது, கட்டாயமில்லை' என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.உணவுத் துறை அமைச்சர், சர்யு ராய் கூறுகையில், ''ஆதாருக்கு பதில், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை, ரேஷன் கடைகளில் பதிவு செய்து, உணவு தானியங்களை பெற்றுக் கொள்ளலாம்,'' என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY