Tuesday, October 24, 2017


'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு சப்ளைக்கு நிரந்தர மையம் அமைக்க முடிவு
சென்னை மற்றும் மாவட்டங்களில் உள்ள உணவு வழங்கல் அலுவலகங்களில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்காக, நிரந்தர மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
தமிழகத்தில், உணவு வழங்கல் துறை சார்பில், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. தற்போது வழக்கப்படும், ஸ்மார்ட் கார்டு, சென்னை, பல்லாவரத்தில் உள்ள ஒரு அச்சகத்தில் அச்சிடப்படுகிறது. அங்கிருந்து, கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி, வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் ரேஷன் கடை வாயிலாக, மக்களிடம் வழங்கப்படுகிறது.
மாற்று ரேஷன் கார்டு தேவைப்படுவோர், அரசு, 'இ - சேவை' மற்றும் பொது சேவை மையங்களில், கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அங்குள்ள ஊழியர்கள், ஸ்மார்ட் கார்டு சேவைக்கு வரும் மக்களை அலைக்கழிப்பு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில், 17 உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகங்களும்; மற்ற மாவட்டங்களில், அனைத்து தாலுகாவிலும், வட்ட வழங்கல் அலுவலகங்கள் உள்ளன. அவற்றில், ரேஷன் கார்டு தர, லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்தன.இதனால், மக்கள் எங்கிருந்தும், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து, 
'இ - சேவை' மையங்களில் பெற்றுக் கொள்ளும் வசதி துவக்கப்பட்டது. 
ஆனால், 'இ - சேவை' மையங்கள், அலட்சியமாக உள்ளதாக, புகார்கள் வருகின்றன. மக்களை சிரமப்படுத்தும் ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, மையங்களை நடத்தும் நிறுவனங்களிடம் தெரிவிக்கப்பட்டது.தற்போது, உணவு வழங்கல் அலுவலகங்களில், ஸ்மார்ட் கார்டுக்காக நிரந்தர மையம் அமைக்கப்பட உள்ளது. இவற்றில், புது ரேஷன் கார்டு விண்ணப்பம் பெறுதல், கார்டு வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு ஒப்பதல் கிடைத்தும், அதற்கான பணிகள் துவங்கும். அனைத்து விபரமும், கம்ப்யூட்டரில் பதிவாகும் என்பதால், 
லஞ்சம் போன்ற முறைகேடு நடக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...