செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம்
பதிவு செய்த நாள்
24அக்2017
23:47
சென்னை: தாம்பரத்தில் இருந்து, செங்கோட்டை செல்லும் சிறப்பு ரயில், புறப்படும் நேரம் இன்று முதல், மூன்று நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் - பூதலுார் இடையேயான ரயில் பாதையில், பராமரிப்பு பணி நடப்பதால், தாம்பரத்தில் இருந்து, செங்கோட்டைக்கு, காலை, 7:00 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், இன்று முதல், 27ம் தேதி வரை, காலை, 9:00 மணிக்கு இயக்கப்படும். செங்கோட்டையில் இருந்து, தாம்பரத்திற்கு, காலை, 6:00 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும், 26, 27ம் தேதிகளில், காலை, 8:00 மணிக்கு இயக்கப்படும்.
No comments:
Post a Comment