ஜெர்மன் தம்பதியின் நாய் மீட்பு : கொஞ்சி விளையாடிய 'லூக்'
பதிவு செய்த நாள்
25அக்2017
01:04
சென்னை: மெரினா கடற்கரையில் காணாமல் போன நாய் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நேபாளத்திற்கு சென்ற ஜெர்மன் நாட்டு தம்பதி, நேற்று சென்னை வந்தனர். அவர்களிடம், நாய் ஒப்படைக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தோர், ஸ்டீபன் காக்ராப். இவரது மனைவி- ஜெனின். சென்னைக்கு சுற்றுலா வந்த இவர்கள், ஜூலை, 8ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, மெரினா கடற்கரைக்கு வந்தனர். அங்கு, அவர்களது, 'லுாக்' என்ற நாயை, மர்மநபர் துாக்கிச் சென்றார்.
இது குறித்து புகார் அளித்த ஜெர்மன் தம்பதி, நாயை கண்டுபிடித்து தருவோருக்கு, தகுந்த சன்மானம் வழங்குவதாக தெரிவித்தனர். இதையடுத்து, லுாக் நாய் குறித்து, வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனாலும், நாய் கிடைக்காததால், ஜெர்மன் தம்பதியினர் வருத்தத்துடன், நேபாளத்திற்கு, சுற்றுலா சென்றனர்.
இந்நிலையில், ஜெர்மன் நாட்டு தம்பதிக்கு ஆதரவாக, சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலர் விஜயா நாராயணன், 'வாட்ஸ் ஆப்', நாளிதழ், சுவரொட்டிகள் மூலம், நாயை தேடி வந்தார். இரு தினத்திற்கு முன், மெரினா கடற்கரையில், சிறுவன் ஒருவனிடம், 'லுாக்' நாய் இருப்பதை பார்த்த ஒருவர்,
விஜயா நாராயணனை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த அவர், சிறுவனிடம் இருந்து நாயை மீட்டார். மேலும், இது குறித்து அவர், போலீஸ் மற்றும் ஜெர்மன் தம்பதியிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, நேபாளத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த, ஜெர்மன் தம்பதி, நேற்று மதியம், சென்னை வந்தனர். பின், அவர்களிடம் லுாக் நாய் ஒப்படைக்கப்பட்டது. நீண்ட நாள், தங்களது செல்ல நாயை பிரிந்திருந்த ஜெர்மன் தம்பதி, லுாக்கை கண்டதும், கட்டி அணைத்து
மகிழ்ந்தனர்.

No comments:
Post a Comment