Wednesday, October 25, 2017

மாயமான அதிகாரியை தேடி போலீசார் ஷீரடி பயணம்

கோவை: மாயமான கோவை வருமான வரித்துறை துணை கமிஷனரை தேடி, தனிப்படை போலீசார் ஷீரடி விரைந்துள்ளனர். கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி, செண்பகராமனின் மகன் சிவக்குமார், 38. இவர், 2008ல், ஐ.ஆர்.எஸ்., தேர்ச்சி பெற்று, கோவை வருமான வரித்துறை, தலைமையிட துணை கமிஷனராக பணியாற்றி வந்தார்.
மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த, 13ம் தேதி, சிவக்குமார் திடீரென மாயமானார். பீளமேடு போலீஸ் விசாரணையில், 13ம் தேதி அதிகாலை, 1.00 மணிக்கு சிவக்குமார், வீட்டில் இருந்து ஒரு சூட்கேசுடன் வெளியேறியது, கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் தெரிந்தது. குடும்ப பிரச்னையால் அவர் வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை கண்டுபிடிக்க, இரு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம், வரி ஏய்ப்பு குற்றவாளிகளை பிடிப்பதில் பயிற்சி பெற்றவரான சிவக்குமார், தான் இருக்கும் இடத்தை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என எண்ணி, 'கிரெடிட்' கார்டு, மொபைல் போன் உள்ளிட்ட அனைத்தையும் வீட்டிலேயே வைத்துச் சென்றுள்ளார்.
'சாய் பக்தரான அவர் ஷீரடி சென்றிருக்கலாம்' என, சந்தேகிக்கும் போலீசார், அங்கு விரைந்துஉள்ளனர்.

No comments:

Post a Comment

Termination Of Employee For A Single Clerical Mistake In Entire Service Career 'Excessive', Minor Penalty Could Be Imposed: MP High Court

Termination Of Employee For A Single Clerical Mistake In Entire Service Career 'Excessive', Minor Penalty Could Be Imposed: MP High ...