Wednesday, October 25, 2017

திருவள்ளூர் கலெக்டருக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தாசில்தார் அலுவலக வாடகை பாக்கி தொகை செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாதவரத்தில், பரிதா சவுகத் என்பவருக்கு சொந்தமான இடத்தில், தாலுகா அலுவலகம் இயங்கிவருகிறது. பல மாதங்களாக வாடகை தராததால், சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி, வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: வாடகை பாக்கி தொகையை, ௩௦ நாட்களுக்குள் அரசு செலுத்த வேண்டும். அதை, முழுமை யாக வழங்கும் வரை, குத்தகை தொகையை, அவ் வப்போது மாற்றி அமைப்பது குறித்த ஷரத்து, ஒப்பந்தத்தில் இடம் பெறும் வரை, வருவாய் துறை செயலர், திருவள்ளூர் கலெக்டர், மாதவரம் தாசில்தார் ஆகியோர் சம்பளம் பெறக்கூடாது.

விசாரணை : அவர்களுக்கு, அரசு சம்பளம் வழங்கக் கூடாது. வாடகை பாக்கியை செலுத்தி, குத்தகைக்கான ஒப்பந்தம் மேற்கொண்ட பின், இந்த அதிகாரிகளுக்கான சம்பளம் முழுவதையும், அரசு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி விட்டதாகவும், சம்பளத்தை வழங்க உத்தரவிடும்படியும், உயர் நீதிமன்றத்தில் வருவாய் துறை செயலர், திருவள்ளூர் கலெக்டர் மற்றும் மாதவரம் தாசில்தார், மனு தாக்கல் செய்தனர்.மனு, நீதிபதி, வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

நடவடிக்கை : அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், வெங்கட்ரமணி, சிறப்பு பிளீடர் திவாகர்,''ஆறு மாதங்களுக்குள், தாலுகா அலுவலக கட்டு மான பணிகள் முடிந்து விடும். வாடகை பாக்கி செலுத்தப்பட்டு விட்டது; நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது,'' என்றனர்.
நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதால், அரசு அதிகாரிகளுக்கான சம்பளத்தை வழங்க, தலைமை செயலர் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...