Wednesday, October 25, 2017

'ஆதார்' இணைப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதுடில்லி: மொபைல் போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய தொலைத் தொடர்பு துறையின் உத்தரவு செல்லாது என, அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'மொபைல் போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என, மத்திய தொலைத் தொடர்பு துறை, மார்ச், 23ல் உத்தரவு பிறப்பித்திருந்தது. 'இந்த உத்தரவு சட்டவிரோதமானது; செல்லாது' என அறிவிக்கக் கோரி, தெசீன் பூனாவாலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, லோக் நீதி அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'மொபைல்போன் இணைப்பு பெற்றுள்ளோரின் அடையாளத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மொபைல் போன் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மொபைல் போன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025