ரூ.5 லட்சத்திற்கு விலை போகுது கிட்னி : எஸ்.பி., முயற்சியால் தப்பிய டெய்லர்
2017
00:53
பின், அவர் கூறியதாவது: எங்களுக்கு, ௧௧ வயதில் மகன், ௧௩ வயதில் மகள் உள்ளனர். என் கணவரின் வேலை மூலம், போதிய வருவாய் கிடைக்கவி ல்லை. நானும் கூலி வேலைக்கு செல்வேன். குடும்ப செலவுக்காக சிலரிடம், கணவர் கடன் வாங்கினார்.
கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். எங்களால் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியாமல், சிரமத்தில் உள்ளோம்.அவிநாசியை சேர்ந்த புரோக்கர் ஒருவர், கணவரை தொடர்பு கொண்டு, 'ஒரு கிட்னியை தானமாக வழங்கினால், ஐந்து லட்சம் ரூபாய் தருகிறேன்' என கூறி, கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வரும்படி கூறி சென்றார்.
நேற்று முன் தினம், எர்ணாகுளத்துக்கு என் கணவர் சென்று விட்டார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. கணவரை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி.,யை தொடர்பு கொண்ட கலெக்டர் பிரபாகர், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
எஸ்.பி., சிவகுமார் கூறியதாவது: கோவையில் இருந்து எர்ணா குளம் செல்ல, ரவி
புறப்பட்டுள்ளார். அவரது மொபைல் எண்ணில் தகவல் தெரிவித்து, உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டும் அல்லது ஊர் திரும்ப வேண்டும், என கூறினோம்.
அவரும், ஈரோட்டுக்கு புறப்பட்டு விட்டதாக உறுதியளித்தார். தற்போது, பஸ்சில் ஊர் திரும்புகிறார். அவர் வந்ததும் விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பதிவு செய்த நாள்
25அக்2017
00:53
ஈரோடு: கடன் பிரச்னையால், புரோக்கர் மூலம் கிட்னியை விற்று பணம் தருவதற்காக, வெளிமாநிலம் சென்ற டெய்லர், ஈரோடு, எஸ்.பி., நடவடிக்கையால் தப்பினார். ஈரோடு, காசிபாளையத்தை சேர்ந்தவர் ரவி, 44; ஆயத்த ஆடை நிறுவன டெய்லர். மனைவி சம்பூர்ணம், 37; இவர், ஈரோடு கலெக்டர் பிரபாகரின் முகாம் அலுவலகத்தில், நேற்று காலை, ஒரு மனு கொடுத்தார்.
பின், அவர் கூறியதாவது: எங்களுக்கு, ௧௧ வயதில் மகன், ௧௩ வயதில் மகள் உள்ளனர். என் கணவரின் வேலை மூலம், போதிய வருவாய் கிடைக்கவி ல்லை. நானும் கூலி வேலைக்கு செல்வேன். குடும்ப செலவுக்காக சிலரிடம், கணவர் கடன் வாங்கினார்.
கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். எங்களால் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியாமல், சிரமத்தில் உள்ளோம்.அவிநாசியை சேர்ந்த புரோக்கர் ஒருவர், கணவரை தொடர்பு கொண்டு, 'ஒரு கிட்னியை தானமாக வழங்கினால், ஐந்து லட்சம் ரூபாய் தருகிறேன்' என கூறி, கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வரும்படி கூறி சென்றார்.
நேற்று முன் தினம், எர்ணாகுளத்துக்கு என் கணவர் சென்று விட்டார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. கணவரை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி.,யை தொடர்பு கொண்ட கலெக்டர் பிரபாகர், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
எஸ்.பி., சிவகுமார் கூறியதாவது: கோவையில் இருந்து எர்ணா குளம் செல்ல, ரவி
புறப்பட்டுள்ளார். அவரது மொபைல் எண்ணில் தகவல் தெரிவித்து, உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டும் அல்லது ஊர் திரும்ப வேண்டும், என கூறினோம்.
அவரும், ஈரோட்டுக்கு புறப்பட்டு விட்டதாக உறுதியளித்தார். தற்போது, பஸ்சில் ஊர் திரும்புகிறார். அவர் வந்ததும் விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment