ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு ஊழியரும் ஊசிபோடுகிறார் : அட...டா இதுவல்லவோ மருத்துவ வளர்ச்சி!
2017
00:50
பதிவு செய்த நாள்
25அக்2017
00:50
மதுரை: மதுரை மாவட்டம் கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிக்கு ஊசி
போட்ட துப்புரவு ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.கருங்காலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். காலை 7:30 மணிக்கு டாக்டர், நர்சுகள் பணிக்கு வரவேண்டும். ஆனால் காலை 9:00 மணிக்கு மேல் தான் பணிக்கு வருவதாக புகார் உள்ளது. இதனால் காலையில் வரும் நோயாளிகளுக்கு அங்கிருக்கும் துப்புரவு ஊழியர் பொன்னுத்தாய்,48, ஊசி போட்டும், மாத்திரை வழங்கியும் சிகிச்சை அளித்துள்ளார். இது குறித்து அப்பகுதியினர் கலெக்டரிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவுப்படி, துப்புரவு ஊழியரை பணி நீக்கம் செய்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அர்ஜுன்குமார் உத்தர
விட்டார்.
துணை இயக்குனர் கூறுகையில், ''சிகிச்சை அளித்த துப்புரவு ஊழியரை பணிநீக்கம் செய்துவிட்டோம். பணியில் இருக்க வேண்டிய டாக்டர், நர்ஸ்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இதையும் மறைக்கிறாங்க! : கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அஜாக்கிரதையாக இருந்த டாக்டர், நர்ஸ் ஆகியோரின் பெயரை தெரிவிக்க துணை இயக்குனர் மறுத்துவிட்டார். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:
Post a Comment