சுற்றுலா பயணிகளின் மொபைல் எண்: பாஸ்போர்ட்டுடன் இணைக்க திட்டம்
புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மொபைல் எண்ணை பாஸ்போர்ட்டுடன் இணைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. திட்டம் இது தொடர்பாக, தொலை தொடர்புதுறை செயலர் அருணா சுந்தர்ராஜன் கூறியதாவது: ஆதார் எண் பெற தகுதி பெறாத வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஆதார் எண் இல்லாத சிம்கார்டு இணைப்பு நடைமுறையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு அவர்களின் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை.
பயனாளர்கள் அவசியம் தொலைதொடர்பு நிறுவனங்களின் அஜாக்கிரதை தொடர்பாக, புகார் வந்ததை தொடர்ந்து தான், மொபைல் போன் இணைப்புகளை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பயனாளர்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் மொபைல் போன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருகிறது. இதனால், உங்கள் மொபைலை தவறான நபர் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Dailyhunt
Dailyhunt
No comments:
Post a Comment