ரூ.1000 உதவித்தொகையில் ரூ.350 அபராதம் வசூலித்த வங்கி! மூதாட்டி வழக்கில் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ்
விகடன்
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த லூயிஸ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், "நெல்லையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு வழங்கப்படும் ரூ,1,000 உதவித்தொ எஸ்.பி.ஐ வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.
மூதாட்டியின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லை என்பதால் அபராதமாக ரூ.350 பிடித்தம் செய்து மீதத் தொகையான ரூ.650 மூதாட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கிளைக்கு மனு அளித்தும் எவ்வித பதிலும் இல்லை. 1,000 ரூபாய் ஓய்வூதியம் என்பது வறுமை கோட்டுக்குக் கீழுள்ள குடும்பத்தினரால் கைவிடப்பட்ட உள்ளிட்ட சிலருக்கு உதவும் நோக்கில் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களுக்கான ஓய்வூதியத் தொகையை பேங்கின் மூலமாகப் பெறுகின்றனர். இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே முதியோர் உதவித்தொகை வழங்கப்படுபவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து, அபராதம் பிடித்தம் செய்யப்படுவதைத் தவிர்க்க அரசு அனைத்து கணக்குகளிலும் குறிப்பிட்ட தொகையை செலுத்த உத்தரவிட வேண்டும். அதுவரை அபராதம் பிடித்தம் செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகைக்கு துவங்கப்பட்ட வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் இருப்புத் தொகை பிடித்தம் செய்ய தேசிய வங்கிகளுக்கு இடைக்கால தடை விதித்தும், இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி 3 வாரத்துக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஒத்திவைத்தனர் .
No comments:
Post a Comment