பெட்ரோல் 'பங்க்'குகள் அக்.13ல் ஸ்டிரைக்
பதிவு செய்த நாள்07அக்
2017
23:01
சென்னை, பெட்ரோல் 'பங்க்'குகள், வரும், 13ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளன.
மத்திய அரசு, தன் வசம் இருந்த, பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை, சில ஆண்டுகளுக்கு முன், இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குவழங்கின. அவை, மாதத்திற்கு,இரு முறை, எரிபொருள் விலையை மாற்றின. ஜூன், 16 முதல், தினமும் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.இதனால், முன் எப்போதும் இல்லாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, வாகனஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.இந்நிலையில், தினசரி விலை நிர்ணயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், வரும், 13ம் தேதி, வேலை நிறுத்த
போராட்டம் அறிவித்துள்ளனர்.இது குறித்து, தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கூறியதாவது:
தினசரி விலை நிர்ணயிப்பதால், வாகன ஓட்டிகள், பங்க் உரிமையாளர் என, யாருக்கும் பயன் இல்லை. வீடுகளுக்கு, பெட்ரோல் சப்ளை செய்யும் திட்டத்தை செயல்படுத்தினால், பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படும். இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் உட்பட, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகள், வரும், 13ம் தேதி மூடப்படும்.
கமிஷன் தொகை உயர்வு உள்ளிட்ட, எங்கள் கோரிக்கைகளை, மத்திய அரசு, ஏற்கவில்லை எனில், 27ம் தேதி முதல், பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment