Wednesday, October 18, 2017

தலையங்கம்

நிலவேம்பு குடிநீர் நல்லதா?, கெட்டதா?



தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசின் சுகாதாரத் துறை மூலம் இதை குறைக்க கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், காய்ச்சல் இன்னும் குறைந்தபாடில்லை.

அக்டோபர் 18 2017, 03:00 AM

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசின் சுகாதாரத் துறை மூலம் இதை குறைக்க கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், காய்ச்சல் இன்னும் குறைந்தபாடில்லை. தினமும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக் கையும், இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டேப் போகிறது. சாதாரண காய்ச்சல் வந்தால்கூட டெங்கு காய்ச்சல் வந்துவிட்டதோ? என்ற அச்சம் வாட்டிவதைக்கிறது. டெங்கு காய்ச்சலை குணமாக்க இன்னும் திட்டவட்டமான ஒரு மருந்தை கண்டுபிடிக்கவில்லை. ஆனால், சித்த மருத்துவர்கள், ‘நிலவேம்பு குடிநீரை குடித்தால் டெங்கு காய்ச்சல் குணமாகிவிடும்’ என்று உறுதியாக நம்பு கிறார்கள். இதை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டு, இப்போது அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகிறார்கள். அரசு மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிலவேம்பு குடிநீர் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதுமே தமிழகத்தின் டெங்கு காய்ச்சல் உலுக்கிவிட்டது. மத்திய அரசாங்கத்தின் கதவுகளைக்கூட இந்த தகவல்கள் தட்டிவிட்டன. அதனால்தான் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியிலிருந்து இந்த நோய் நிலை மையை கண்டறிய 5 மருத்துவ நிபுணர்களை தமிழ் நாட்டிற்கு அனுப்பினார். இந்த நிபுணர்கள் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சில மாவட்டங்களுக்கும் சென்று பார்வையிட்டனர். ஓரிரு நாளில் மத்திய அரசாங்கத்திடம் அறிக்கை தர இருக் கிறார்கள். இந்த குழுவின் தலைவரான அஷுதோஷ் பிஸ்வாஸ், ‘நிலவேம்பு குடிநீரை குடிக்கச்சொல்லி இந்த மருத்துவக்குழு பரிந்துரை செய்யாது. ஏனெனில், இது குணமாகும் என்று அறிவியல் ரீதியாக எந்த ஆய்வுகளும் இதுவரையில் தெரிவிக்கவில்லை’ என்றும் அதிர்ச்சிகரமான ஒரு தகவலை தந்தார். ஆனால், இப்போது சில மருத்துவ ஆய்வு இதழ்களில், ‘9 மூலிகைகளைக்கொண்ட இந்த நிலவேம்பு குடிநீரில் உள்ள ஒரு மூலிகை மலட்டுத் தன்மையை உருவாக்கும் சக்திகொண்டது’ என்று குறிப்பிட்டிருப்பதாக சில நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நிலவேம்பு குடிநீரால் பயன் எதுவுமில்லை என்றும் வேறுசிலர் கூறுகிறார்கள். நிலவேம்பு பவுடரை சாப்பிடும் போது பக்கவிளைவுகள் ஏற்படும். இந்த பவுடரில் நிலவேம்பு மட்டுமே இருக்கிறது. மற்ற மூலிகைகள் சேர்க்கப்படவில்லை என்றும் கூறுகிறார்கள். இது பொதுமக்களிடையே அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. நிலவேம்பு குடிநீரால் பயனில்லை என்றால், டெங்கு காய்ச்சலுக்கு எதுதான் மருந்து? என்று கேட்கிறார்கள்.

ஆனால், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘இந்த நிலவேம்பு குடிநீர் டெங்கு காய்ச்சலை குணமாக்குகிறது என்பது காலம்காலமாக அனுபவத்தால் அறிந்த ஒன்று. குறிப்பாக நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு மட்டுமல்லாமல், மேலும் 8 மூலிகைகளைக்கொண்டு, சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகும். அங்கீகரிக்கப்படாத மருந்து என்று குறிப்பிடுவது தவறான கருத்து. இன்னொன்று இந்த மூலிகைக்கொண்டு தயாரிக் கப்படும் மருந்துகள் சீனா, தாய்லாந்து மற்றும் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு, பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு, பல நோய்களை குணமாக்க பயன்படுத் தப்பட்டு வருகிறது. இதற்கென பல ஆராய்ச்சி கட்டுரைகளும் உள்ளன. எந்த ஒரு ஆங்கில மாத்திரை யாகட்டும், சித்த, ஆயுர்வேத, யுனானி போன்ற இந்திய மருந்துகளாகட்டும் அதற்கு பல்வேறு குணங்களும், சில பக்கவிளைவுகளும் இருக்கும். சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவர்களால் வெற்றிகரமாக ஆண்டாண்டு காலமாக அங்கீகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டுவரும் இந்த நிலவேம்பையும் சித்த மருத்துவரின் அறிவுரையின்படி உட்கொள்வது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என்கிறார். ஒருசாரார் நிலவேம்பு குடிநீர் அருந்துவதால் டெங்கு காய்ச்சல் குணமாகும் என்றும், ஒருசாரார் இதனால் பயனில்லை என்றும் சொல்வதால், யார் சொல்வது சரி என்பதை ஆராய்ச்சி ரீதியாக உறுதிசெய்து விரைவில் மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். ஆக, நிலவேம்பு குடிநீர் நல்லதா?, கெட்டதா? என்பதை இந்திய மருத்துவக்கழகம் ஆய்வு செய்து உடனடியாக உறுதிப்படுத்தவேண்டும்.

No comments:

Post a Comment

Granting of Minimum remuneration to the Practical External Examiner even if none of the registered candidates have reported for the Practical/Viva-voce examinations

KERALA UNIVERSITY OF HEALTH SCIENCES  ABSTRACT KUHS –  Exam General A – Granting of Minimum remuneration to the Practical External Examiner ...