Tuesday, October 24, 2017


சிக்கலில் வேல் வாங்கும் சிங்காரவேலர்...

மு.ஹரி காமராஜ்

நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் உள்ள நவநீதேசுவரர் ஆலயம் தமிழகம் முழுவதும் புகழ்பெற்றது. இந்த தேவாரப்பதிகம் பெற்ற சிவ ஆலயத்தில் தனி சந்நிதியில் அருள் பாலிப்பவர் தான் சிங்காரவேலர். வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தரும் சிங்காரவேலர் கந்த சஷ்டி எனும் ஆறு நாள் திருவிழாவில் சூரசம்ஹாரத்தின் முக்கிய நாயகனாக விளங்குகிறார். ஆம், முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தாலும், அதற்கு முந்தின நாள் அதாவது ஐந்தாம் நாள் சிக்கலில் தான் அன்னை சக்தி தேவியிடம் வேல் வாங்கி ஆசி பெற்று மறுநாள் சூரனை சம்ஹாரம் செய்கிறார். இந்த புகழ் பெற்ற வேல் வாங்கும் விழா இன்று சிக்கலில் நடைபெற உள்ளது.



இங்குள்ள வேல்நெடுங்கன்னி என்னும் அன்னை பராசக்தியிடம் சிங்காரவேலர் இன்று வணங்கி வேல் பெறுகிறார். அன்னை பராசக்தி தனது அத்தனை சக்திகளையும் ஒன்று திரட்டி வேலாக உருமாற்றி சூரனை சம்ஹரிக்க மகனிடம் தருவாள். அந்த வேலை பெரும் தருணத்தில் சிங்காரவேலவரின் நெற்றியில் வியர்வை துளிகள் அரும்பி பெருகத்தொடங்கும். இது பேரதிசயமாக, முருகப்பெருமானின் அற்புதமாக எண்ணி பக்தர்கள் பரவசம் கொள்வார்கள். அன்னை சக்தியின் அற்புத வேலின் மகத்துவத்தால் தான் இந்த வியர்வை பொங்குவதாக ஆன்மிகப் பெரியோர்கள் சொல்கிறார்கள். சிக்கலில் வேல் பெரும் வைபோகம் இன்று இரவு நடைபெற உள்ளது. சிக்கல் மட்டுமின்றி சிறுவாபுரி உள்ளிட்ட அநேக முருகப்பெருமானின் ஆலயங்களிலும் இந்த விழா நடைபெறவிருக்கிறது.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...