Thursday, October 19, 2017

தீபாவளிக்கு முதல் நாளில்மது விற்பனை ரூ.150 கோடி

தீபாவளிக்கு முதல் நாள், 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது.தமிழகத்தில், வழக்க மான நாட்களில், 70 முதல், 85 கோடி ரூபாய், ஞாயிற்றுக்கிழமைகளில், 110 கோடி ரூபாய், தீபாவளி, பொங்கல் பண்டிகையின் போது, 150 கோடி ரூபாய் வரை, மது விற்பனை நடப்பது வழக்கம்.

நேற்று, தீபாவளி பண்டிகையால், நேற்று முன்தினம், 150 கோடி ரூபாய் வரை, மது விற்பனை நடந்தது. கடந்த ஆண்டு, 140 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாளில், 7.25 கோடி ரூபாய்க்கு மது விற்பனைநடந்தது. நடப்பாண்டு, நேற்று முன்தினம், 7.66 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. நேற்றும், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தமிழகம்

முழுவதும்,நேற்று மதுவிற்பனை சூடு பிடித்ததால்,200 கோடி ரூபாயை தாண்டும் என, ஊழியர்கள் தெரிவித்தனர்.



டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையின்போது, 300 கோடிமுதல், 500 கோடி ரூபாய் வரை, மது விற்பனை நடக்கும். கடந்த ஆண்டு, கடைகளின் எண்ணிக்கை குறைந்ததால், விற்பனையில் மந்தநிலை காணப்பட்டது. நடப்பு ஆண்டு, மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறக்க பட்டதோடு, கடந்த வாரம், மதுபான விலையும் உயர்த்தப்பட்டது.இதனால், கடந்த ஆண்டை விட, அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஊழியர்கள் அளித்த தகவல்படி, நேற்று முன் தினம் மட்டும், 150 கோடி ரூபாயை தாண்டி உள்ளது. நாளை, வங்கியில் பணம் செலுத்தும் நிலையில், முழுவிபரம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY