Thursday, October 19, 2017

புதிய ரயில் கால அட்டவணையில் அனந்தபுரி வேகம் அதிகரிக்கப்படுமா : தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு
t
நாகர்கோவில்: விரைவில் வெளியாக உள்ள புதிய ரயில்வே கால அட்டவணையில் அனந்தபுரி ரயிலை சூப்பர் பாஸ்ட் ரயிலாக அறிவிக்க வேண்டும் என்றும் தென்மாவட்ட பயணிகள் விரும்புகின்றனர்.

திருவனந்தபுரம்-- சென்னை அனந்தபுரி ரயில் 2002-ம் ஆண்டு பட்ஜெட்டில் வாரத்துக்கு ஆறு நாள் ரயிலாக அறிவித்து இயக்கப்பட்டது. 2005 ரயில் பட்ஜெட்டில் தினசரி ரயிலாக மாற்றி இன்று வரை தினசரி ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட கல்குளம் மற்றும் விளவன்கோடு தாலுகா மக்கள் நேரடியாக சென்னை செல்ல பயன்படுகிறது. தென் மாவட்ட மக்களுக்கும் இந்த ரயில் பயன்படுகிறது. குமரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு இரண்டு இரவு நேர தினசரி ரயில்கள் மட்டுமே உள்ளன. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இருக்கைகள் கிடைப்பது சிரமம். இதனால் மாவட்டத்தில் உள்ள பெருவாரியான பயணிகள் அடுத்த தேர்வாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலையே நம்பி உள்ளனர். 
இந்த ரயில் மட்டுமே குமரி மாவட்டத்தில் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களை சென்னையுடன் இணைக்கிறது. தினசரி ரயிலாக மாற்றப்பட்ட பின், எத்தனையோ ரயில் கால அட்டவணைகள் வெளியிடப்பட்டும் இந்த ரயிலில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 
நாகர்கோவில்- சென்னை , சென்னை- நாகர்கோவில் இடையே இந்த ரயில் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் தாமதமாகவே வருகிறது. இதனால் இதில் பயணம் செய்பவவர்களக்கு அரை நாள் அல்லது ஒரு நாள் விரயமாகிறது.
இந்த ரயிலை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்ற வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கொல்லம் வரை நீட்டிக்க திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். 
இதன் மூலம் குமரி மாவட்டததுக்கான ஒதுக்கீடு குறையும் நிலை ஏற்பட்டடுள்ளது. இதை கைவிட்டு அனந்தபுரி ரயிலை சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்ற வேண்டும் என்று குமரி மாவட்டம் உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY