Sunday, October 8, 2017

கவர்னர் மாளிகை உள்ளேயே அதிகாரிகள் இடமாற்றம் ஐ.ஏ.எஸ்., வட்டாரம் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்
அக் 08,2017 02:23

கவர்னர் அலுவலகத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் பணிக்கு சென்றவர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக, பதவி உயர்வு பெற்றும், கவர்னர் மாளிகைக்குள்ளேயே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வட்டாரத்தில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக கவர்னர் மாளிகையில், செயலர், ரமேஷ்சந்த் மீனா, பல்கலை துணை செயலர், மோகன், கம்ப்ட்ரோலர் என்ற தணிக்கை அதிகாரி, முரளிதரன் ஆகியோர், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.இவர்கள், கவர்னர் பெயரைக்கூறி, அரசில், பல்வேறு விஷயங்களை சாதித்து கொள்வதாக கூறப்படுகிறது. பல்கலை துணை வேந்தர்கள், விரிவுரையாளர்கள் நியமனத்தில், முறைகேடு நடக்க, இவர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கவர்னர் மாளிகையில், துணை செயலர் பதவியில் இருந்த, மோகன், முரளிதரன் ஆகியோர், மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் பணிக்கு சென்றனர். தற்போது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக, பதவி உயர்வு பெற்றும், அவர்கள் இட மாற்றம் செய்யப்படவில்லை. இவர்களை, இடமாற்றம் செய்ய வேண்டும் என, கவர்னர் மாளிகை ஊழியர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், 29 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், மோகன் மற்றும் முரளிதரன் பெயர் இடம் பெற்றுள்ளது. கவர்னரின் பல்கலை துணைவேந்தராக இருந்த மோகன், தணிக்கை அதிகாரி முரளிதரன் இருவரும், துணை செயலராக மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, கவர்னர் மாளிகைக்கு உள்ளேயே, பதவி மாற்றல் உத்தரவு பெற்றுள்ளாக கூறப்படுகிறது.இது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வட்டாரத்தில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே இடத்தில் பணிபுரியும், கவர்னரின் செயலர் மற்றும் துணை செயலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்துவருகிறது.-

நமது நிருபர் -

No comments:

Post a Comment

Govt probing how cost of secretariat doubled in 4 years

Govt probing how cost of secretariat doubled in 4 years Koride.Mahesh@timesofindia.com 19.10.2024 Hyderabad : With allegations of abnormal i...