Sunday, October 8, 2017



அக். 31ம் தேதி முதல் அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்துகிறது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்
By DIN | Published on : 07th October 2017 04:46 PM



இஸ்லாமாபாத்: மிக மோசமான நஷ்டம் காரணமாக பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த அமெரிக்காவுக்கான விமான சேவை நிறுத்தப்பட உள்ளது.

பல கோடி ரூபாய் நட்டம் காரணமாக, அமெரிக்காவுக்கு இயக்கப்படும் விமான சேவையை வரும் அக்டோபர் 31ம் தேதி முதல் நிறுத்திவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாகவே அமெரிக்காவுக்கான விமான சேவையை அக்டோபர் 31ம் தேதிக்குப் பிறகான தேதிக்கு முன்பதிவு செய்யும் வசதி நிறுத்தப்பட்டுவிட்டது.

1961ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வரும் இந்த சேவை, பல முறை நட்டம் காரணமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டாலும், பல்வேறு அரசியல் அழுத்தங்கள் காரணமாக தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

HC: Wife's kin living in hubby's place cruelty

HC: Wife's kin living in hubby's place cruelty  Srishti Lakhotia TNN 23.12.2024  Kolkata : Friends and family of a married woman sta...