Monday, October 23, 2017

'ஆன் - லைன்' வில்லங்க சான்று  பதிவுத்துறைக்கு, 'குட்டு!'
'ஆன் -- லைன் முறையில், வில்லங்க சான்று கேட்டு வரும் விண்ணப்பங்கள் குறித்த பதிவேடுகளை பராமரிக்க, சார் - பதிவாளர்களை அறிவுறுத்த வேண்டும்' என, பதிவுத்துறை தலைவருக்கு, தமிழக தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.



சொத்து விற்பனையில் ஈடுபடுவோர், வில்லங்க சான்றுகளை பெற, ஆன் - லைன் முறையில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதில், கட்டணம் செலுத்தி வில்லங்க சான்று களை பெற வேண்டும்.பின், இணையதளம் வாயிலாக, வில்லங்க விபரங்களை இலவசமாக பார்க்கும் வசதியை பதிவுத்துறை துவக்கியது. இருப்பினும், ஆன் - லைனில்

கட்டணம் செலுத்தி, வில்லங்க சான்று பெறும் சேவை முறையாக செயல்படவில்லை என, கூறப்படுகிறது.

இந்நிலையில், 'தஞ்சாவூர் இணைப்பு - 1' சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட, ஒரு நிலத்துக்கு, ஆன்- லைன் முறையில் கட்டணம் செலுத்தியும், வில்லங்க சான்று கிடைக்க  வில்லை என, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், சுரேஷ் என்பவர் மனு செய்தார். உரிய பதில் கிடைக்காததால், தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு, தலைமை தகவல் ஆணையர், கே.ராமானுஜம் முன்னிலையில், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் நேரில் ஆஜராகி, 'ஆன் - லைன் முறையில் விண்ணப்பிப்போர் குறித்த விபரங்கள் எதுவும் பதிவேடாகபராமரிப்பதில்லை' என, தெரிவித்தார்.

மேலும், கட்டணம் செலுத்தி, ஆன் - லைனில் வில்லங்க சான்று பெறுவது தொடர்பான கேள்வி களுக்கு, இணையதளத்தில் வில்லங்க விபரங்களை இலவசமாக பார்க்கும் வசதி தொடர்பானபதில்களை தெரிவித்ததால், சர்ச்சை எழுந்தது.

இதன் பின், தலைமை தகவல் ஆணையர், ராமானுஜம் பிறப்பித்த உத்தரவு:வில்லங்க சான்று உள்ளிட்ட, ஆன் - லைன் சேவைகளில் விண்ணப்பிப்போருக்கு உரிய பதில் கிடைக்க, பதிவுத்துறை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், இது தொடர்பான பதிவேடு களை பராமரிக்க, சார் - பதிவாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Life for dad, 4 kin, who poured acid in woman’s mouth for ‘honour’ Vocal Cords In Shreds, She Had Written Down Her Dying Declaration

Life for dad, 4 kin, who poured acid in woman’s mouth for ‘honour’ Vocal Cords In Shreds, She Had Written Down Her Dying Declaration Kanward...