Monday, October 23, 2017

அரசு அலுவலகங்களுக்கு பூட்டு: அமைச்சர் தகவல்

நாகப்பட்டினம்: ''தமிழகத்தில், 50 ஆண்டு பழமையான கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களில் பழுது இருந்தால், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, இழுத்து பூட்டப்படும்,'' என, கைத்தறி துறை அமைச்சர் மணியன் தெரிவித்தார்.

நாகையில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், 50 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகங்கள் எத்தனை என, கண்டறியப்பட்டு, அவற்றில் பழுதான கட்டடங்கள் எவை என தெரிய வருகிறதோ, அந்த அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் வெறியேற்றப்பட்டு, பழுதான கட்டடம் இழுத்து பூட்டப்படும். மாற்று ஏற்பாடாக, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.நாகை மாவட்டத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் அதிகமுள்ளன. அந்த கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என தெரியவந்தால், இடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்டடம் இடிப்பு : நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததில், டிரைவர் மற்றும் கண்டக்டர், எட்டு பேர் உயிரிழந்தனர்; படுகாயம் அடைந்த மூவர், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இடிந்து விழுந்த கட்டடத்தில் எஞ்சிய பகுதிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நேற்று நடந்தது. இப்பணி மூன்று மணி நேரம் நீடித்தது. முன்னதாக எஞ்சிய கட்டடத்தில் இருந்த பொருட்கள் மீட்கப்பட்டன.

No comments:

Post a Comment

Life for dad, 4 kin, who poured acid in woman’s mouth for ‘honour’ Vocal Cords In Shreds, She Had Written Down Her Dying Declaration

Life for dad, 4 kin, who poured acid in woman’s mouth for ‘honour’ Vocal Cords In Shreds, She Had Written Down Her Dying Declaration Kanward...