நேர்த்திக் கடன் செய்ய மறந்தவர்களா நீங்கள்?
Published on : 13th October 2017 03:30 PM
நம்மில் பலர் எந்தக் கோயிலுக்கு சென்றாலும் எனக்கு இந்த பிரச்னைகளை தீர்த்து வை இறைவா, நான் உனக்கு இதைச் செய்கிறேன் நீ எனது கோரிக்கையை நிறைவேற்று குடும்பத்துடன் வந்து நேர்த்திக்கடன் செய்கிறேன் என வேண்டுதல் வைப்பவர்கள். தனது நிலை மாறியதும் வேண்டுதல்களை மறந்து விடுகிறார்கள்
நமக்கு திடீர் என்று ஏதேனும் பிரச்னை வரும் போது தான் நேர்த்திக்கடன் இருப்பதே நம் நினைவுக்கு வரும். நேர்த்திக்கடனைச் செலுத்தாத எந்தப் பக்தனையும் கடவுள் தண்டிப்பது இல்லை என்பது தான் உண்மை. நாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா?
நேர்த்திக் கடன் செய்யத் தவறினால் ஒருவித தோஷம் ஏற்படுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றது. இந்த தோஷம் விலக என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு ஐந்து பௌர்ணமிக்கு தொடர்ந்து சென்று வழிபட வேண்டும். 5-வது பௌர்ணமி அன்று உங்கள் குல வழக்கப்படி பொங்கல் வைத்து சுவாமிக்கு பட்டு வஸ்திரம், அபிஷேகம் செய்து எனது குலதெய்வமே எந்த சுவாமிக்கு என்ன வேண்டுதல் வைத்தேன் என நினைவில் இல்லை எங்களை மன்னித்து இப்போது செய்த பூஜையை நேர்த்திக்கடனாக ஏற்று எங்களை வாழ வை எனப் பிரார்த்தனை செய்ய வேண்டும்
குல தெய்வம் தெரியாதவர்கள் உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்து வேண்டுதல்களை இறைவனிடம் வைத்து வழிபடலாம்.
No comments:
Post a Comment