ஓடிபி மூலம் செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்கும் வசதி வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
டிசம்பர் 09, 2017, 09:10 PM
புதுடெல்லி,
பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை பெறவும், செல்போன், வங்கி கணக்கு எண் போன்ற சேவைகளுடனும் ஆதாரை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த சேவைகளுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்து வருகிறது.
அந்தவகையில் செல்போன் எண் தவிர பிற சேவைகள் மற்றும் திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31-ந் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு (2018) மார்ச் 31-ந் தேதி என நீட்டித்து நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஓடிபி மூலம் இணைக்கும் வசதி வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஓடிபி முறையில் வாடிக்கையாளர்கள் ஐவிஆர் எஸ்க்கு தங்கள் செல்போனில் இருந்து கால் செய்து, அதில் உள்ள மொழிகளை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் ஆதார் எண் இணைப்பதற்கான எண்ணை அழுத்தினால், உடனடியாக வாடிக்கையாளரிடம் ஆதார் எண் கேட்கப்படும்.
இதனையடுத்து செல்போனுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இதனை பதிவு செய்தவுடன், செல்போன் எண் சரிபார்க்கப்பட்டு, ஆதாருடன் மொபைல் எண் இணைக்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தேபடியே செல்போன் மூலம் எளிதாக ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment